கோலாலம்பூர்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போராளி களுடன் தொடர்பு வைத்திருப் பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் பேராக், மலாக்கா, சிலாங்கூர் ஆகிய மூன்று மாநிலங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனை களின்போது அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரில் ஒருவர் 21 வயது இளைஞர் என்றும் மலேசி யாவில் பள்ளிவாசல்கள் அல்லாத மற்ற வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன் படுத்துவதற்கான வெடிபொருட் களைத் தயாரிக்குமாறு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போராளிகளிடமிருந்து அந்த இளைஞருக்கு உத்தரவு வந்த தாகக் கூறப்படுகிறது.
அத்தகைய ஆபத்தான வெடி பொருட்களை அதிக அளவு தயாரிக்குமாறு மலேசியா தேடி வரும் மாமுட் அகமட் மற்றும் சவூதி அரேபிய வெடிகுண்டு நிபுணர் ஒருவர் ஆகிய இரு வரிடமிருந்து உத்தரவு வந்ததை அந்த இளைஞர் ஒப்புக்கொண் டுள்ளதாக தேசிய போலிஸ் படைத் தலைவர் முகம்மட் ஃபுஸி ஹருன் கூறினார். அந்த இளைஞர் பேராக்கில் இம்மாதம் 8ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் அல்- காய்தா மற்றும் அபு சாயஃப் போராளிகளுடன் தொடர்பு வைத் திருப்பவர் என்றும் முகம்மட் ஃபுஸி கூறினார்.
அந்த சந்தேக நபர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த பயங்கரவாதக் குழுவில் சேர்ந்த தாக நம்பப்படுகிறது என்றும் வெடிகுண்டு தயாரிக்க அவர் மூன்று முறை முயற்சி செய்திருக் கிறார் என்றும் போலிஸ் படைத் தலைவர் கூறினார். மலேசியாவில் உள்ள முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் அல்லாத மற்ற வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பக்கத்து நாடு ஒன்றிலிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு ஒன்றை வாங்குமாறு சிரியாவில் உள்ள மலேசிய ஐஎஸ் போராளி ஒருவரிடமிருந்து அந்த இளைஞருக்கு உத்தரவு வந் துள்ளது என்றும் திரு முகம்மட் ஃபுஸி கூறினார்.

