மலேசிய சமயப் பள்ளியில் தீ விபத்து; 23 பேர் மரணம்

மலேசிய சமயப் பள்ளியில் தீ விபத்து; 23 பேர் மரணம்

2 mins read

கோலாலம்பூரில் ஜாலான் டத்தோ கிராமாட் பகுதியில் அமைந்துள்ள ஒரு சமயப் பள்ளியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 21 மாணவர்களும் இரு காப்பாளர் களும் மாண்டனர். உரிமமின்றி செயல்பட்ட, இன் னும் தீ பாதுகாப்பு அனுமதியும் பெறாத அப்பள்ளியின் மூன்றாம் தளத்தில் தீப்பற்றியது. தீ விபத் திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்தனர். ஆயினும், அதற்குள்ளாகவே தீயில் கருகி பலர் இறந்துவிட்டனர். மாண்டோரின் சடலங்கள் ஒன் றின்மேல் ஒன்றாக குவிந்து கிடந் தன என்று கோலாலம்பூர் போலிஸ் தலைவர் அமர் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.

காலை தொழுகை நேரத்தின் போது உதவி கோரி எழுப்பப்பட்ட கூக்குரல்களைத் தாங்கள் கேட்ட தாக அப்பகுதிவாசிகள் கூறினர். இதையடுத்து, கட்டடத்தினுள் இருந்தோரைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் முயன்றபோதும் தீயின் உக்கிரத்தால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. விபத்து நிகழ்ந்த மூன்றாம் தளத்தில் ஒரே ஒரு வாயில் மட்டும் இருந்ததாலும் சன்னல்களில் கழற்ற முடியாதபடி உலோகக் கிராதிகள் பொருத்தப்பட்டிருந்த தாலும் உள்ளே இருந்தவர்களில் பலரால் தப்பிக்க முடியவில்லை. தீயில் முற்றிலும் கருகிப்போன தால் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் அத னால் மரபணு சோதனை நடத்த வேண்டியுள்ளது என்றும் மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்பிரமணியம் தெரிவித்தார். இதற்கிடையே, எல்லா இஸ்லா மிய சமயப் பள்ளிகளும் பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி உத்தரவிட்டுள்ளார்.