பங்ளாதேஷை நோக்கி ரோஹிங்யா இந்துக்கள்

பங்ளாதேஷை நோக்கி ரோஹிங்யா இந்துக்கள்

1 mins read
f89db9be-33f1-48df-afbc-f38aebbe74b4
-

ராக்கைன்: தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை யிலிருந்து தப்பிக்க ரோஹிங்யா முஸ்லிம்கள் மட்டுமின்றி ரோஹிங்யா இந்துக்களும் படாத பாடுபட்டு வருகின்றனர். மியன் மாரின் ராக்கைன் மாநிலத்தில் வெடித்துள்ள வன்முறை பலரது உயிர்களைப் பறித்துள்ளது. படு பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டவர்களில் ரோஹிங்யா இந்துக்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையிலிருந்து தப்பித்து பங்ளாதேஷ் தப்பிச் சென்றுள்ள ரோஹிங்யா இந்துப் பெண் ஒருவர் தமக்கு நேர்ந்த கொடுமையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

ரோஹிங்யா இந்துக்களின் கிராமங்களுக்குள் முகமூடி அணிந்து, அரிவாள் ஏந்தி வந்தவர்கள் அங்கிருந்த பலரைக் கொன்று குவித்ததாக அவர் கூறினார். தம் கண் முன்னே தமது கணவரையும் மாமனார், மாமியாரையும் அவர்கள் கொன்ற தாக நான்கு மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் கூறினார். ரோஹிங்யா இந்துப் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டு கொல்லப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். வன்முறையாளர்கள் ரோஹிங்யா இந்துக்களின் கிராமங்களுக்குத் தீவைத்து அழித்ததாக அவர் கூறினார்.

பங்ளாதே‌ஷில் அடைக்கலமான ரோஹிங்யா இந்துக்கள். படம்: ஏஎஃப்பி