கோலாலம்பூர்: இஸ்லாமிய சமயப் பள்ளியில் நடந்த தீ விபத்தில் சிக்கி இறந்தவர்கள் மரபணுச் சோதனை வழி அடையாளம் காணப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவலை மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது ஃபேஸ்புக் வலைத்தளத்தில் தெரிவித்தார். இவ்விவரங்களை சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு முறைப்படி தெரிவித்து அவர்களின் இறுதிச் சடங்கு தொடர்பாக பேசப்படும் என்றார். இவ்வேளையில் ஐபிஎஃப்என் தலைவர் டாக்டர் முகம்மது ஷாக்கும் இந்த விபத்து தொடர்பாக கைகொடுத்த எல்லாருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இதுவே கடைசி துயரச் சம்பவமாக இருக்கட்டும். இதற்குமேல் இதுபோன்று நடக்காமல் முறையான பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சமயப் பள்ளி தீவிபத்தில் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
1 mins read

