சோல்: ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்தும், உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும் தன்னை மாற்றிக் கொள்ளாத வட கொரியா, நேற்று மீண்டும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது. நேற்று பியோங்யாங்கில் இருந்து ஏவப்பட்ட அத்தொலைதூர ஏவுகணை, ஜப்பான் நாட்டின் வடக்கு ஹொக்காய்டோ நகருக்கு மேலே சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. ஒரு வேளை திசை திருப்பப்பட்டால், 3,700 கி.மீ வரை செல்லக்கூடிய ஏவுகணை, அமெரிக்காவின் குவாம் பகுதியைச் சென்றடையக்கூடியது. இருந்தும், அது அப்படி குறி வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை
1 mins read

