கனமழையால் பினாங்கில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு

கனமழையால் பினாங்கில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு

1 mins read

பினாங்கு: விடாது பெய்த கனமழையால் பினாங்கில் நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 100 வீடுகள் பாதிக்கப் பட்டன. மேலும், பல முக்கியச் சாலைகள், ஜார்ஜ் டவுன் வணிக வட்டாரம் ஆகியவையும் பாதிக்கப் பட்டன. அதிகாலை 3.00 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை அதி காலை 5.00 மணியளவில் மிகக் கடுமையானதாக மாறியது. இத னால் செபராங் பிராயிலும் பினாங்குத் தீவிலும் உள்ள பல சாலைகள் வெள்ளத்தால் மூழ்கின. இந்த கனமழையானது வியட் னாம் அருகில் 1000 பேரைத் தாக்கிய டொக்சூரி புயலின் பாதிப்பாக இருக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் தெரி வித்தனர்.

இந்தப் புயல் இவ்வார இறுதியில் அடுத்ததாக வட தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளைக் குறிவைத்து நகர் வதாகவும் கணிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கு ஒரு மீட்டர் உயரத்தையும் தாண்டியதால் மீட் புப் பணியினர் தொடர்ந்து மக் களைத் துயர் துடைப்பு மையங் களுக்கு மாற்றும் பணியில் தீவிரமாகியுள்ளனர். இவ்வேளையில் பண்டார் பாரு ஆயர் ஈத்தாமில் மின் துண்டிப்பும் ஏற் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. இதே நேரத்தில், தஞ்சோங் பூங்காவில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் யாரும் காயமடைய வில்லை என்றாலும் 6 கார்கள் மண்ணில் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பெண் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமான வெள்ள நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்.