லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல்

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல்

1 mins read
6be3ea92-8efe-4793-99ce-8704ad81b2a2
-
multi-img1 of 2

லண்டனில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் பயணிகள் பலர் காயமடைந்தனர். வெடிபொருள் வெடித்ததில் 18 பேர் காயமுற்றதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். வெடிப்பு காரணமாகப் பயணிகள் பலருக்கு முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகம் தெரிவித்தது. மோசமான தீக்காயங்களு டனும் ரத்தக் கசிவுடனும் பயணிகள் பலர் அவுதியுற்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ரயிலில் இருந்த கொள்கலன் ஒன்று வெடித்ததாகப் பயணி ஒருவர் கூறியதாக பிரிட்டனின் தி டெலிகிராஃப் நாளிதழ் தெரிவித்தது. அந்த கொள் கலனில் மின்கம்பிகள் தென் பட்டதாகவும் கூறப்படுகிறது.

பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில் இருந்த ரயிலில் நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவத்தை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என பிரிட்டிஷ் போலிசார் அறிவித்துள்ளனர். இந்தப் பயங்கரவாதத் தாக்கு தல் நிகழ்ந்தபோது காலை உச்ச நேரம் காரணமாக ஏராளமான பயணிகள் ரயிலில் இருந்தனர். வெடிப்பை அடுத்து பதற்றம் அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நெரிசல் காரணமாகச் சிலர் கீழே விழுந்ததாகவும் மற்றவர்கள் அவர்களை மிதித்துச் சென்றதில் அவர்கள் காயமுற்றதாகவும் தெரி விக்கப்பட்டது.

ரயிலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகக் காயம் அடைந்து தலையில் கட்டுடன் காணப்படும் பெண்ணுக்குத் துணையாக நிற்கும் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி