வாஷிங்டன்: அழகான பல தீவுகளை உள்ளடக்கி சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்த கரீபியத் தீவு, 'இர்மா' புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முந்நூறு ஆண்டுகளில் முதல் முறையாக 'பர்புடா' தீவு வெள்ளத்தினால் சுவடில்லாமல் அழிந்துள்ளதாகவும், தற்பொழுது அந்தத் தீவில் ஒருவரும் வசிக்கவில்லை என்றும் அமெரிக்காவின் ஆன்டிகுவா, பர்புடா தூதர் அறிவித்துள்ளார். ஓராண்டு முழுவதும் பெய்யவேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித்தீர்த்ததால், முன்பு அழகிய தீவாக விளங்கிய கரீபியத் தீவுகளில் பல தீவுகள் தற்பொழுது மக்கள் வசிக்கவே சாத்தியமற்ற இடங்களாக காட்சியளிக்கின்றன.
இர்மா புயல், வெள்ளத்தால் காணாமற்போன பர்புடா தீவு
1 mins read

