அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு தெரேசா மே கடும் விமர்சனம்

அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு தெரேசா மே கடும் விமர்சனம்

2 mins read

லண்டன்: லண்டன் சுரங்க ரயிலில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அத்தாக்குதல் தொடர் பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தினை பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே சாடியுள்ளார். லண்டனில் நடந்த அத் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரிட்டிஷ் போலிசாரோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் திரு டிரம்ப் கூறிய கருத்தை திருவாட்டி மே கடுமையாக விமர்சித்துள்ளார். லண்டன் தாக்குதல் தொடர்பில் போலிசார் புலன் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் யாரும் எதையும் யூகித்து கூற வேண்டாம் என்றும் திருவாட்டி மே கேட்டுக் கொண் டுள்ளார்.

கடுமையான சேதம் விளைவிக்கும் நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். லண்டன் சுரங்க ரயிலில் குண்டு வெடித்த சில மணி நேரங்களில் திரு டிரம்ப், பிரிட்டன் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். திருவாட்டி மே, தனது தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர வாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. லண்டன் குண்டு வெடிப்பில் குறைந்தது 29 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அத் தாக்குதல் தொடர்பில் 18 வயது ஆடவர் ஒருவரை பிரிட்டிஷ் போலிசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே சுரங்க ரயில் குண்டு வெடிப்பின்போது அங் கிருந்த சிலர் அதுபற்றி விவரித் தனர். அவர்களில் ஒருவர், ரயிலி லிருந்து பலர் பதற்றத்துடன் வெளியில் ஓடியதாகக் கூறினார். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானவர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டனர்.