உலக நாடுகளின் உதவியை நாடும் பங்ளாதேஷ்

உலக நாடுகளின் உதவியை நாடும் பங்ளாதேஷ்

1 mins read
704b60e4-12b6-496c-940c-d79cc7992f02
-

டாக்கா: மியன்மாரிலிருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக் கான ரோஹிங்யா அகதிகள் பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உலக நாடுகளின் உதவியை பங்ளாதேஷ் நாடவுள் ளது. வரும் செவ்வாய்க்கிழமை ஐநா சபை பொதுக்கூட்டத்தில் ரோஹிங்யா விவகாரம் குறித்து விவாதிக்கபடவுள்ளது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று நியூயார்க் புறப் பட்டார். ரோஹிங்யா பிரச் சினைக்குத் தீர்வு காண உலக நாடுகளின் உதவியை அவர் நாடவிருப்பதாக தகவல்கள் கூறின. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நீடிக்கும் சண்டைக் குப் பயந்து தப்பிச்சென்ற 400,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதே ‌ஷில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பங்ளாதேஷ் வான் வெளியில் மியன்மாரின் ஹெலி காப்டர்கள் அத்துமீறி சென்றதற் காக மியன்மாரை பங்ளாதேஷ் எச்சரித்துள்ளது. இம்மாதம் 10, 12, 14 ஆகிய தேதிகளில் மியன்மாரின் ஆளில்லா விமானங்களும் ஹெலி காப்டர்களும் பங்ளாதேஷ் வான் வெளியில் பறந்து சென்றதாகவும் இது விதிமுறைகளை மீறிய செயல் என்றும் பங்ளாதேஷ் தெரி வித்துள்ளது. மியன்மாரின் இத்த கைய செயல்களால் கடும் விளைவு கள் ஏற்படும் என்றும் பங்ளாதேஷ் எச்சரித்துள்ளது. மீண்டும் இது போன்ற அத்துமீறல் செயல் நடக்காமல் இருப்பதை மியன்மார் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பங்ளாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லை முகாமில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை பங்ளாதேஷ் எல்லை காவலர் ஒருவர் கண்காணித்துக்கொண்டிருக்கிறார். மியன்மாரிலிருந்து 400,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். படம்: ஏஎஃப்பி