கைரோ: காஸாவை நிர்வகித்து வந்த ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன ஒற்றுமைக்காக அதன் நிர்வாகத்தை கலைத்துள்ளது. அதிபர் மஹ்மூட் அப்பாஸின் ஃபதா இயக்கத்துடனான நீண்ட பகையை நிறைவு செய்து பொதுத் தேர்தல் நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் பாலஸ்தீனத்தில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தலில் ஹமாஸ் எதிர்பாராத வெற்றி பெற்றது. அதற்கு பின் அரசியல் பிரச்சினைகள் அதிகரித்து 2007ஆம் ஆண்டு ஹமாஸும் ஃபதாவும் காஸாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டதிலிருந்து இன்றுவரை காஸாவை ஹமாஸ் அமைப்பே ஆட்சி செய்து வருகிறது. 2011 முதல் பல முறை இரு அமைப்புகளையும் இணைத்து காஸாவிலும் மேற்கு கரையிலும் அதிகா ரத்தை பகிரும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தோல்வி யடைந்துள்ளன.

