கோலாலம்பூர்: சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் மலேசியா உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருப் பதை மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் மறுத்துள்ளார். பெர்சத்து மலேசியாவின் உச்சமன்ற உறுப்பினர் ரையிஸ் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்றும் அவர் சொன்னார்.
மலேசியா மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக உறவுகளைப்போல சீனாவுடனான நெருக்கமான உறவும் அனைத்துலக வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார் அமைச்சர் அனிஃபா அமான்.

