மணிலா: மராவி நகரில் போராளிகளின் பிடியில் நான்கு மாதத்திற்கு மேல் சிக்கியிருந்த கத்தோலிக்க பாதிரியாரை பிலிப் பின்ஸ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மராவியை முற்றுகையிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு போராளி களிடம் அவர் பிணைக் கைதி யாகச் சிக்கியிருந்தார்.
போராளிகளின் முக்கிய கட் டுப்பாட்டு நிலையத்தை ராணுவம் கைப்பற்றிய சில மணி நேரத்தில் பாதிரியார் விடுவிக்கப்பட்டார். பள்ளிவாசலுக்கு அருகே சனிக்கிழமை காலை 11 மணியள வில் பாதிரியார் சோகனப்பை போராளிகள் கைவிட்டனர் என்று ராணுவம் குறிப்பிட்டது. டன்சலான் கல்லூரி ஆசிரிய ரான லார்ட்வின் ஒகோபியோ என்ற மற்றொரு பிணையாளியின் உதவியுடன் பாதிரியார் தப்பியுள் ளார் என்று மேற்கு மின்டானோ கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரென் மெடினா சொன்னார்.
இருப்பினும் பாதிரியார் தப்பிய விவரத்தை மறுவுறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று ராணுவ பொதுத்தொடர்பு அதிகாரி கூறினார். பாதிரியார் சோகனப் ஏற்கெ னவே டாவோ நகருக்கு வந்து விட்டதாகவும் அங்கு அதிபர் டுட்டர்டேயை அவர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

