சியோல்: பியோங்யாங் மீது மேலும் வலுவான நெருக்கடி கொடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் உறுதியளித் துள்ளனர். வடகொரியா மீது பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் அணு வாயுதச் சோதனையை நடத்தி, அமெரிக்காவுக்குச் சமமான ராணுவ பலத்தைப் பெறுவதே நோக்கம் என்று வடகொரிய தலை வர் கிம் ஜோங் உன் கூறியதை அடுத்து இரு நாட்டுத் தலைவர் களும் நேற்று இந்த உறுதியை அளித்தனர்.
பியோங்யாங் மீது ஐநா பாதுகாப்பு மன்றம் புதிய தடை களை அறிவித்த ஒரு சில நாட் களில் கடந்த வெள்ளிக்கிழமை இதுவரை இல்லாத அளவு 3700 கி.மீ. தூரம் செல்லும் ஏவுகணையை வடகொரியா பாய்ச்சியது. ஜப்பா னின் ஹொக்கைடோ தீவைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்த அந்த 'ஹுவாசோங்-12' ரக ஏவுகணை, பெருமளவு வலிமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சோதனை செய்யப்பட்ட ஒரே நாளில் அந்த ஏவுகணை பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக திரு கிம் நேற்று அறிவித்தார்.

