மீண்டும் அம்னோவுக்குத் திரும்பினார் டயிப்

மீண்டும் அம்னோவுக்குத் திரும்பினார் டயிப்

1 mins read

சிலாங்கூரின் முன்னாள் முதல்வரும் அம்னோ கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான முகம்மது முகம்மது டயிப் அம்னோவில் மீண்டும் இணைந்து இருப்பதாக அம்னோவின் தலை வர் நஜிப் ரசாக் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவரை கட்சிக்கு மீண்டும் வரவேற்பதாகவும் அவரிடமிருந்து சிறந்த பல நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். "அவர் எதிர்க்கட்சிக் கூட்டணி யான பிகேஆரின் முயற்சிகள் வீண் என்பதை அறிவார்," என்று திரு டயிப் கட்சியில் சேர்வது குறித்து அறிவித்த பிறகு தமது டுவிட்டர் செய்தியில் திரு நஜிப் குறிப்பிட்டார். மேலும் "அம்னோ, தேசிய முன்னணி ஆகியவற்றின் வெற்றிக்கு அவர் பங்களிப்பார் என்று நம்புகிறேன்," என்றும் டுவிட்டரில் கருத்துரைத்தார் திரு நஜிப். 2013ஆம் ஆண்டு பாஸ் கட்சியில் சேர்ந்த முகம்மது டயிப், 2015ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறி பிகேஆர் கூட்டணியில் இணைந்தார். செய்தியாளர் கூட்டத்தில் முகம்மது டயிப்பும் கலந்து கொண்டார்.