ரோஹிங்யா அகதிகளுக்கு உணவு, குடிநீர், இருப்பிடம், அடிப்படை சுகாதாரம் பற்றாக்குறை

ரோஹிங்யா அகதிகளுக்கு உணவு, குடிநீர், இருப்பிடம், அடிப்படை சுகாதாரம் பற்றாக்குறை

1 mins read

மியன்மாரிலிருந்து அதிக எண்ணிக்கை யிலான ரோஹிங்யா அகதிகள் பங்ளா தே‌ஷுக்கு இடம்பெயர்வதால் உணவு, குடிநீர், இருப்பிட வசதி ஆகியவற்றில் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அகதிகளுக்கு உதவிகள் வழங்கும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 'இனப் பேரழிவின் எடுத்துக்காட்டு' என ஐக்கிய நாடுகள் சபையால் வருணிக்கப்படும் ராணுவத் தாக்குதல் களிலிருந்து சிறுபான்மை இனத்தவர் களான ரோஹிங்யா முஸ்லிம்களில் சுமார் 410,000 பேர் மேற்கு ராக்கைன் மாநிலத்திலிருந்து பங்ளாதே‌ஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

"பலர் பசியுடனும் களைப்புடனும் உணவு, குடிநீர் இன்றி பங்ளாதேஷை வந்தடைகின்றனர்," என்று 'சேவ் த சில்ட்ரன்' எனும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பங்ளாதேஷ் இயக்குநர் மார்க் பியர்ஸ் கூறியுள்ளார். "பெருகிவரும் அகதிகளால் அதிகரித்துவரும் உணவு, குடிநீர், இருப்பிடம், அடிப்படைச் சுகாதாரம் போன்றவற்றை ஈடுகட்ட முடியாமல் போவதை எண்ணி மிகவும் வருந்து கிறேன். குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாவிட்டால் சிரமங்கள் மேலும் அதிகரிப்பதுடன் உயிரிழப்புகளும் ஏற்படும்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.