லண்டன் ரயில் குண்டு வெடிப்பு: இரண்டாவது நபர் கைது

லண்டன் ரயில் குண்டு வெடிப்பு: இரண்டாவது நபர் கைது

1 mins read

லண்டன் சுரங்க ரயிலில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததன் தொடர்பில் இரண்டாவது நபரை போலிசார் கைது செய்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள ஹௌன்ஸ்லோவின் புறநகர்ப் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு முன்பாக 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார் என போலிசாரின் அறிக்கை தெரிவித்தது. பிரிட்டனின் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக வும் தெற்கு லண்டன் காவல் நிலையத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதாகவும் போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த பயங்கரவாதச் செயலின் தொடர்பில் நேற்று முன்தினம் 18 வயது ஆடவரை டோவர் துறைமுகப் பகுதியில் போலிசார் கைது செய்தனர்.