மராவியில் சண்டை முடிவுக்கு வர ராணுவம் கடைசி முயற்சி

மராவியில் சண்டை முடிவுக்கு வர ராணுவம் கடைசி முயற்சி

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகருக்குள் ஊடுருவிய ஐஎஸ் ஆதரவு பெற்ற போராளிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் கடந்த பல வாரங்களாக சண்டையிட்டு வருகிறது. போராளிகளிடம் கடந்த நான்கு மாத காலமாக சிக்கியிருந்த பாதிரியார் சோகனப்பும் மேலும் ஒரு பிணை யாளியும் ராணுவத்தினரால் மீட்கப் பட்ட நிலையில் அந்நகரில் பதுங்கி யிருக்கும் போராளிகள் அனைவரையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்ட தாக ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு அடியில் உள்ள சுரங்கத்தினுள் சிக்கியுள்ள 12 பிணையாளிகளைக் காப்பாற்றும் முயிற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

மராவி நகரில் போராளிகளின் பிடியில் இன்னும் 50 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்நகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பதுங்கியிருக்கும் மாவுட் போராளிகள் பிலிப்பீன்ஸ் ராணுவத் தினரை எதிர்த்து சண்டையிட்டு வருவதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். போராளிகள் ஒன்றுகூடும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்த அங்குள்ள பள்ளிவாசல் ராணுவத்தினர் வசம் வந்துள்ள போதிலும் போராளிகளின் எதிர்ப்பு குறையவில்லை என்றார் அவர்.