மியன்மார் அரசுக்கு எதிராகப் போரிட மலேசியர்களை சேர்க்கும் ஐஎஸ்

மியன்மார் அரசுக்கு எதிராகப் போரிட மலேசியர்களை சேர்க்கும் ஐஎஸ்

1 mins read
3b36bd8d-67da-4ae7-bd8a-6204b00f1067
-

மலாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம் கள் அந்நாட்டு ராணுவத்தின ரால் பல இன்னல்களை அனுப வித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் மியன்மார் அரசாங் கத்திற்கு எதிராக "புனிதப் போரில்" ஈடுபட மலேசியர்கள் பலரை ஐஎஸ் குழு ஈர்த்து வருவதாக மலேசியத் தகவல் கள் கூறுகின்றன. ஐஎஸ் பயங்கரவாதக் குழு ரோஹிங்யா விவகாரத்தைப் பயன்படுத்தி அதன் பயங்கர வாதத் தாக்குதல்களை அரங் கேற்ற புதிய உறுப்பினர்களை சேர்த்து வருவதாக மலேசிய மத்திய போலிஸ் சிறப்புப் படைப் பிரிவின் உயர் அதிகாரி அயூப் கான் கூறினார். மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் நசுக்கப்படுவதைக் காட்டும் புகைப்படங்களை இணையப்பக்கங்களில் வெளி யிட்டு அதனைப் பார்த்து அனு தாபம் கொள்ளும் புதியவர் களை ஐஎஸ் குழு ஈர்த்து வருவதாகவும் அவர் சொன் னார். மலாக்காவில் இளையர் களுக்கான விழிப்புணர்வு ஆய்வரங்கில் கலந்துகொண்ட திரு அயூப், செய்தியாளர் களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.