மெக்சிகோவில் பெண்கள் கொடுமைக்கு எதிராகப் போராட்டம்

மெக்சிகோவில் பெண்கள் கொடுமைக்கு எதிராகப் போராட்டம்

1 mins read

மெக்சிகோ சிட்டி: இளம்பெண்னைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் நியாயம் கேட்டு மெக்சிகோ சிட்டியில் இளையர் முதல் முதியவர் வரையிலான பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். "இது உன் தவறல்ல மாரா" என்ற வாசகங்கள் ஏந்தியபடி பெண்கள் மெக்சிகோ சிட்டியை வலம் வந்தனர். மாராவின் மறைவுக்கு நியாயம் கேட்டு தேசிய தலைமைச் சட்ட அதிகாரியின் பணிமனைக்கு முன்பு போராட்டவாதிகள் வந்து சேர்ந்தனர். "இரவில் பெண்கள் வெளியே செல்வதற்குப் பாதுகாப்பு இல்லை. இது பெண்களுக்கு அநீதியாக இருக்கின்றது. இதுபோன்ற கொலைகளும் கொடுமைகளும் பெண்களுக்கு எதிராக இருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாராவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என பல போராட்டவாதிகள் கருத்து தெரிவித்தனர்.