ஜப்பானில் திடீர் தேர்தல், அபேயின் வாக்குறுதிகள்

ஜப்பானில் திடீர் தேர்தல், அபேயின் வாக்குறுதிகள்

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பிரதமரான ‌ஷின்சோ அபே தனது தேர்தல் பிரசார வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அந்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது கல்வித் துறை, குழந்தைகள் பராமரிப்புப் பணிகள் மேம்பாட்டுக்கு அதிகத் தொகை ஒதுக்கீட்டுத் திட்டம் ஆகும். மேலும் வடகொரியாவிற்கு எதிராக கடுமையாக நடந்து கொள்வது, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைப்பது போன்ற திட்டங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. நாட்டின் விற்பனை வரியை உயர்த்தவும் அபே திட்டமிட்டு உள்ளார். இந்த திட்டத்தினால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் கூடுதல் தொகையை அனைத்து தலைமுறையினருக்கான சமூக பாதுகாப்புப் பணிகளுக்காகச் செலவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.