பாலித் தீவில் எரிமலை குமுறும் ஆபத்து

பாலித் தீவில் எரிமலை குமுறும் ஆபத்து

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள அகுங் என்ற எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறக்கூடிய ஆபத்து உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்தோனீசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அபாய எச்சரிக்கை குறைந்த அளவிலிருந்து ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த எரிமலையின் சீற்றம் அதிகரிக்கும்போது அதனை சமாளிக்க அரசாங்கம் ஆயத்த நிலையில் இருப்பதாக பாலித் தீவின் பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.