மனித உரிமை மீறல்களுக்கு ஆங் சான் சூச்சி கண்டனம்

மனித உரிமை மீறல்களுக்கு ஆங் சான் சூச்சி கண்டனம்

1 mins read
9bd95942-8526-4a00-a274-0c2d397bc9da
-

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு அரசின் முதன்மை ஆலோசகரான ஆங் சான் சூச்சி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ரோஹிங்யா விவகாரத்தில் அனைத்துலகக் கண்காணிப்பு குறித்து தமது நாட்டிற்கு அச்சமில்லை என்றும் சூச்சி அம்மையார் கூறி யிருக்கிறார். சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்யா மக்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் மாநிலத்தில் சென்ற மாதம் 25ஆம் தேதியில் இருந்து இடம்பெற்றுவரும் வன் முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; 400,000க்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான பங்ளாதே‌ஷில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ரோஹிங்யா விவகாரம் குறித்து பேசிய திருவாட்டி சூச்சி, ராக்கைனில் இடம்பெற்றுவரும் வன்முறை களுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மியன்மார் அரசாங்க ஆலோசகரும் ஆளும் கட்சித் தலைவருமான ஆங் சான் சூச்சி ஆற்றிய உரையை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்