வன்முறை காரணமாக தமது நாட் டுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந் தி ருக்கும் 420,000 ரோஹிங்யா முஸ் லிம்களை மியன்மார் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா கேட்டுக்கொண்டுள்ளார். ஐநா பொதுச்சபைக் கூட்டத் தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென் றிருக்கும் திருவாட்டி ஹசினா அங்குள்ள பங்ளாதேஷ் மக்களிடம் பேசினார். கடந்த மூன்று வாரங்களாக பெரிதாக உருவெடுத்திருக்கும் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் விவகாரம் தொடர்பாக அனைத்துலக நாடுகள் மியன்மாருக்குக் கடுமை யான நெருக்குதல் கொடுக்க வேண் டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹிங்யா விவகாரம்: மியன்மாருக்கு பங்ளாதேஷ் வேண்டுகோள்
1 mins read

