மெல்பர்ன்: ஐந்து வயது சிறுவன் தலைப்பாகை அணிந்திருந்ததால் அவனை சேர்த்துக் கொள்ள மறுத்த ஆஸ்திரேலிய பள்ளி பாகுபாடு காட்டியுள்ளது என்று ஆஸ்திரேலிய நடுவர் மன்றம் தீர்ப்பளித் துள்ளது. மெல்பர்னில் உள்ள மெல்ட்டன் கிறித்துவப் பள்ளியின் சீருடை கொள்கை யின்படி கிறித்துவர் அல்லாதவர்கள் தலைப்பாகை அணியக் கூடாது. ஆனால் சிறுவனின் தந்தை சகரதீப் சிங் அரோரா, தலைப்பாகை அணிவதைத் தடுப்பது பாகுபாடு பார்ப்பதற்கு சமமாகும் என்று வாதிட்டார். இதை நடுவர் மன்றம் ஏற்றுக் கொண்டு சிறுவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
தலைப்பாகை; சிறுவனுக்கு வெற்றி
1 mins read
-

