சிட்னி: ஆஸ்திரேலியாவில் தீவிர வாதத் தாக்குதல்கள் நடை பெறக்கூடும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் அந் நாட்டின் தீவிரவாத அச்சுறுத் தலுக்கு எதிரான போலிஸ் பிரிவின் உயர் அதிகாரி நேற்று கூறினார். அண்மை காலத்தில் சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு உணவகத்தில் நடந்த தாக்குதல். 'சிட்னி சீஜ்' என்று பெயரிடப் பட்ட அந்த தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலிய போலிஸ் அண்மை ஆண்டுகளில் இதுவரை 13 தீவிர வாதத் தாக்குதல்களை முறியடித்து உள்ளது. இதில் கடந்த ஜூலை மாதம் விஷ வாயுவைப் பயன்படுத்தி விமானத் தை தகர்க்கும் முயற்சியை முறியடித்ததும், இறைச்சி வெட் டும் இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை சமாளித்ததும் அடங்கும்.
'தீவிரவாதத் தாக்குதல் தவிர்க்க முடியாதது'
1 mins read

