மெக்சிகோ நிலநடுக்கம்: 200 பேருக்கு மேல் பலி

மெக்சிகோ நிலநடுக்கம்: 200 பேருக்கு மேல் பலி

2 mins read
63ae0906-4116-4d2f-94da-179c082f58ba
-

மெக்சிகோ: மத்திய மெக் சிகோவை நேற்று 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் கூறினர். இதே மெக்சிகோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்தின் 32வது ஆண்டு நினைவு நாளான நேற்று நி ல ந டு க் க த் தி லி ரு ந் து பாதுகாத்துக் கொள்வதற்கான பாவனைப் பயிற்சியில் மக்கள் ஈடுபட்டபோது நிலநடுக்கம் மீண்டும் தாக்கியது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஏராளமான கட்டடங்கள் சில நொடிகளில் சரிந்து விழுந்தன. இதனால் இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியிருக் கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையொட்டி மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருபதுக்கும் மேற் பட்ட குழந்தைகள் இறந்துவிட்ட தாகவும் 30க்கும் மேற்பட்ட குழந் தைகள் காணவில்லை என்றும் அந்நாட்டின் அதிபர் தெரிவித்தார். சக்திவாய்ந்த நிலநடுக்கம் பல மாநிலங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 250 பேருக்கு மேல் இருக்கும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப் பட்டது. ஆனால் இந்த எண் ணிக்கை பின்னர் 216க்குக் குறைக்கப்பட்டது. மெக்சிகோ சிட்டியில் மட்டும் குறைந்தது 117 பேர் இறந்தனர் என்று குடிமக்கள் பாதுகாப்பு முகவையின் தலைவர் லூயிஸ் ஃபெலிப் புவென்டே சொன்னார். இந்த நிலநடுக்கத்தில் மெக் சிகோ தலைநகரிலிருந்து சில மணி நேரத் தொலைவில் உள்ள மோலோஸ் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

மெக்சிகோ சிட்டியைத் தாக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி