ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில காவல்துறை அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் சட்டவிரோத சூதாட்டத்தில் தொடர்புடைய 282 பேரை கைது செய்துள்ளனர். இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் நடந்த 54 அதிரடிச் சோதனைகள் நடத்தப் பட்டதாக ஜோகூர் உதவி கமிஷனர் அஸ்மான் ஆயுப் தெரிவித்தார். இதில் 1,010 சூதாட்ட இயந்திரங்களும் 20,819 ரிங்கிட் (S$6698.18) ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத சூதாட்டத்தை முழுமையாகத் துடைத் தொழிக்க தாங்கள் அவ்வப்போது இதுபோன்ற அதிரடிச் சோதனைகளை நடத்தவுள்ளதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத சூதாட்டம்: ஜோகூரில் 282 பேர் கைது
1 mins read

