டிரம்ப்: வடகொரியாவை முற்றாக அழிப்போம்

டிரம்ப்: வடகொரியாவை முற்றாக அழிப்போம்

1 mins read

நியூயார்க்: அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் வடகொரியா தொடர்ந்து மிரட்டல் விடுத்தால் வடகொரியாவை "முழுமையாக அழிப்போம்" என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வடகொரிய விவகாரத்தில் அமெரிக்கா மிகுந்த பொறுமை காத்து வந்துள்ளது என்று கூறிய திரு டிரம்ப், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தற்காக்க வடகொரியாவை முற்றாக அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் சொன்னார். ஐநா பொது சபை கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.