கோலாலம்பூர்: அபு சாயஃப்புடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர்: அபு சாயஃப்புடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கைது

1 mins read

கோலாலம்பூர்: அபு சாயஃப் போராளிகள் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று சந் தேகிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் நாட்ட வர்கள் 7 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியப் போலிசார் கூறினர். புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள் இம்மாதம் 14 ஆம் தேதி கோலாலம்பூரில் அதிரடி சோதனை களை மேற்கொண்டபோது அவர் கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் முகம்மட் ஃபுஸி ஹருண் கூறினார். அந்த 7 பேரும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியார் நிறு வனங்களில் பாதுகாவலர் களாக வேலை செய்து வந்த தாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஃபுஸி கூறினார். அவர்கள் அனைவருமே 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் சபா, சண்டகான் வழியாக மலேசி யாவுக்குள் வந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.