மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடு களில் சிக்கியுள்ளவர்களைக் காப் பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட் படுத்தாது இரவு பகலாக மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மெக்சிகோ வில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனு சரிக்கப்படும் என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியாடோ அறிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த என்ரிக் ரெப்சமென் தொடக்கப்பள்ளிக்கூடக் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

