டென்பசார்: இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலை குமுறும் அபாயம் இருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தச் சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக் கானோர் பத்திரமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். நிலைமை மோசமடையக்கூடும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தூர சுற்றுவட்டாரத்தில் முகாமிடவோ மலையில் ஏறவோ வேண்டாம் என்று சுற்றுப்பயணி களையும் உள்ளூர்வாசிகளையும் அவர்கள் கேட்டுக்கொண்டுள் ளனர். எரிமலையின் அடிவாரத்தில் வசிக்கும் கிராமவாசிகள் சிலர் அவ்விடத்தைவிட்டு உடனடியாக வெளியேறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். எரிமலையிலிருந்து புகை உயர் வதைக் கண்டு பலர் அங்கிருந்து கிளம்பினர். 1963லிருந்து 1964ஆம் ஆண்டு வரை அகுங் எரிமலை வெடித்ததில் 1,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.
குமுறும் அபாயத்தில் பாலி எரிமலை; பலர் வெளியேற்றம்
1 mins read

