சிட்னி: ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டபூர்வமாக அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவில் அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இத்தகைய திருமணங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று பிரசாரம் செய்து வரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபட் நேற்று முன்தினம் ஹோபார்ட் நகரில் தாக்கப்பட்டார். ஒரே பாலினத் திருமண ஆதரவாளர் ஒருவர் கைகுலுக்க விரும்புவது போல திரு அபட்டை நெருங்கினார். ஆனால் அவர் அருகில் வந்ததும் தமது தலையால் திரு அபட்டின் தலையை முட்டினார். இதன் விளைவாக 59 வயது திரு அபட்டின் உதட்டில் இலேசான காயம் ஏற்பட்டது. திரு அபட் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் பலர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த வாக்கெடுப்புக்கான முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபட் தாக்கப்பட்டார்
1 mins read

