சோல்: அமெரிக்காவுக்கு எதிராக வரலாறு காணாத ஆக தீவிரமான எதிர்நடவடிக்கையை எடுக்கப் போவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சூளுரைத்துள்ளார். ஊடகம் மூலம் அவர் இதை நேற்று தெரிவித்திருப்பது கொரிய தீபகற்பத்தில் இருக்கும் பதற்ற நிலையை அதிகரித்திருக்கிறது. வடகொரியாவின் ஆயுதத் திட்டங்களுக்கு எதிராக அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இதைக் கடுமையாகச் சாடிய கிம் ஜோங் உன், டிரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறினார். தமது நாட்டை அழிக்கப்போவ தாகக் கூறி வரும் டிரம்ப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்போவ தாக அவர் மிரட்டல் விடுத்திருப்பது அரசியல் கண்காணிப்பாளர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், பசிபிக் கடலில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதிக்கக்கூடும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத் துள்ளது. நியூயார்க் சென்றிருந்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங் ஹோ இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாக தென்கொரிய ஊடகம் தெரி வித்துள்ளது. ஐநா மன்ற பொதுச் சபையில் வடகொரியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கடுஞ்சொற்கள் பயன் படுத்தியது இருநாடுகளுக்கும் இடையிலான பகைமையை மேலும் மோசமாக்கி இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவிக்கும் கிம் ஜோங் உன். படம்: ஏஎஃப்பி

