வெல்லிங்டன்: நியூசிலாந்தில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் பில் இங்லிஷின் தேசிய கட்சி முன்னிலை வகிப்பதாக ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக் கை உணர்த்துகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இருப்பினும் மற்ற கட்சி களின் உதவி இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க போதுமான வாக்குகள் அக் கட்சிக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளுடன் பேச்சு நடத்தும் என்று தெரிகிறது. ஆகவே புதிய பிரதமர் யார் என்பதை நியூசிலாந்து மக்கள் அறிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங் கள்கூட ஆகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் பில் இங்லிஷிற்கு போட்டியாக விளங்கும் தொழிற்கட்சித் தலைவர் திருமதி ஜெசிண்டா அர்டென் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. 95.3% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தேசிய கட்சிக்கு 46.2% வாக்குகளும் தொழிற் கட்சிக்கு 35.7% வாக்குகளும் கிடைத்துள்ளன.
நியூசிலாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் பில் இங்லிஷ் முன்னிலை
1 mins read

