ஆபத்து: 70,000 பேர் வெளியேற ஆலோசனை நியூயார்க்: அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'மரியா' புயலின் தாக்கத்தால் போர்ட்டோ ரிகோ தீவு கடுமையான பாதிப்புக் குள்ளானது. பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 205 கி.மீ, வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. போர்ட்டோ ரிகோ தீவில் உள்ள ஓர் ஆற்றில் நீர் நிரம்பியுள்ளதால் குவாஜாடகா அணைக்கட்டு எந்த நேரத்திலும் உடைந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்று தேசிய பருவநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள 70,000 பேர் உடனடியாக பாது காப்பான இடங்களுக்குச் செல்லு மாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மரியா புயல் தாக்கிய பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்தன. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. புயலில் சேதம் அடைந்த ஒரு வீட்டுக்கு வெளியில் குடியிருப்பாளர்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

