ரோஹிங்யா அகதிகளுக்கு 200மி.டாலர் உதவி தேவை

ரோஹிங்யா அகதிகளுக்கு 200மி.டாலர் உதவி தேவை

1 mins read
be19cca7-10a4-47a4-8f2b-3de13dcbe4c0
-

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நீடிக்கும் வன்முறை கள் முடிவுக்கு வர மியன்மார் அரசாங்கம் உடனடி நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது. மியன்மாரிலிருந்து வெளியேறி பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ அடுத்த ஆறு மாதங்களுக்கு 200 மில்லி யன் அமெரிக்க டாலர் (S$269 மில்லியன் ) நிதி தேவைப்படுவதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராக்கைன் மாநிலத்தில் மனிதாபிமான உதவிகள் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் பெட்ரிக் முர்ஃபி செய்தியாளர்களிடம் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம் களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து தப்பிச்சென்ற ரோஹிங்யா மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தி லிருந்து இதுவரை 420,000 ரோஹிங்யா மக்கள் ராக்கைன் மாநிலத்திலிருந்து வெளியேறி பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ள தாகக் கூறப்படுகிறது.

பங்ளாதே‌ஷில் உள்ள ஒரு முகாமில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ராணுவ வீரர் ஒருவர் அந்த அடையாள அட்டையை அகதிகளிடம் கொடுக்கிறார். படம்: ஏஎஃப்பி