ஒபாமா சுகாதார திட்டத்தை ரத்து செய்ய ஜான் மெக்கைய்ன் மீண்டும் எதிர்ப்பு

ஒபாமா சுகாதார திட்டத்தை ரத்து செய்ய ஜான் மெக்கைய்ன் மீண்டும் எதிர்ப்பு

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மில்லியன் கணக் கான அமெரிக்கர்கள் நன்மை அடையும் வகையில் மருத்துவ காப்புறுதித் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். அத்திட்டத்தை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் குடியரசு கட்சி மூத்த உறுப்பினரும் அரிசோனா செனட்டருமான ஜான் மெக்கைய்ன் அத்திட்டத்தை ரத்து செய்ய மீண்டும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதனால் அத் திட்டத்தை ரத்து செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் திரு டிரம்ப், மெக்கைய்னை கடுமை யாகக் குறை கூறியுள்ளார்.