வடகொரியா அருகே பறந்த அமெரிக்க போர் விமானங்கள்

வடகொரியா அருகே பறந்த அமெரிக்க போர் விமானங்கள்

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனை காரணமாக அமெரிக்கா வுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் குண்டு வீசித் தாக்கும் அமெரிக்க போர் விமானங்கள் வடகொரியாவுக்கு மிக அருகில் பறந்துள்ளன. இந்த 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்க போர் விமானம் எதுவும் வடகொரியாவுக்கு இவ் வளவு அருகில் பறந்தது கிடை யாது. அமெரிக்காவின் படைபலத்தை வெளிக்காட்டும் வகையில் வட கொரியாவின் கிழக்குக் கடற்கரை யோரமாக சனிக்கிழமை அமெரிக்க விமானப் படையின் பி-=1பி லான்சர் விமானங்களுடன் போர் விமானங் களும் பறந்தன.

வடகொரியாவின் எந்த விதமான மிரட்டலையும் முறியடிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தயாராக இருப்பதைக் காட்டும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில் நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய வடகொரிய வெளி யுறவு அமைச்சர் ரி யோங் ஹோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தன் அழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகக் கூறி னார். சில நாட்களுக்கு முன்பு திரு டிரம்ப் கூறிய அதே வார்த்தையைப் பயன்படுத்தி அவரை திரு ரி சாடினார்.