டாக்கா: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பிச்சென்று பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள 429,000 ரோஹிங்யா முஸ்லிம்களில் பலருக்கு சிகிச்சை அளித்து வரும் ஐநா மருத்துவக் குழுவினர், கடுமையான பாலியல் தாக்குதலால் பல பெண்கள் காயம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளனர். சிறுபான்மை ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் ராணுவத்தினர் மானபங்கம் முதல் கும்பலாக பாலியல் தாக்குதலில் ஈடுபடுவது போன்ற பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பியோடியவர்கள் கூறி வருகின்றனர். இக்குற்றச்சாட்டுகளை மியன்மார் அதிகாரிகள் மறுத்து வந்துள்ளனர். இதற்கிடையே பங்ளாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைத்தொலைபேசி எதுவும் விற்கக்கூடாது என்று பங்ளாதேஷ் அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ரோஹிங்யா பெண்கள்
1 mins read

