நான்காவது முறை வெற்றியை எதிர்பார்க்கும் ஏஞ்சலா மெர்க்கல்

நான்காவது முறை வெற்றியை எதிர்பார்க்கும் ஏஞ்சலா மெர்க்கல்

1 mins read

பெர்லின்: ஜெர்மனியில் நேற்று நடந்த தேர்தலில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளியல் நாடான ஜெர்மனியின் இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றியை எதிர்பார்க்கும் மெர்க்கல், இம்முறை 'ஆல்டெர்னெடிவ் ஃபார் ஜெர்மனி' (ஏஎஃப்டி) எனும் வலது சாரி கட்சியுடன் கடும் போட்டியை எதிர்நோக்குகிறார். 2015 முதல் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வந்துள்ள ஒரு மில்லியனுக்கும் மேலான குடியேறிகளாலும் அகதிகளாலும் கோபமடைந்த மக்களை பிரதிநிதிக்கும் கட்சியாக 'ஏஎஃப்டி' விளங்குகிறது. அக்கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு அதன் ஆதரவு அதிகரித்து, ஜெர்மனியின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் என்று நம்பப்படுகிறது.