ராக்கைன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இந்து மக்களின் பிணக்குவியல் கொண்ட கல்லறை கண்டுபிடிக் கப்பட்டத் தகவலை மியான்மார் அரசு தெரிவித்தது. இந்தக் கல்லறையில் மொத்தம் 28 பிணங்கள் இருந்தன. அதில் பெண்களே அதிகம் என்றும் அனைவரும் இந்துக்கள் எனவும் தெரி விக்கப்பட்டது. இவர்கள் ரோஹிங்யா போராளிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என மியன்மார் அரசாங்கம் கூறு கிறது. மியான்மாரில் ராக்கைன் பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசு கூறும் தகவல்களை தனிப்பட்ட முறையில் சரிபார்ப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பு மியன்மாரில் போலிஸ் சாவடிகள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
ராக்கைனில் ரோஹிங்யா இந்து மக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு
1 mins read

