அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 3,650ஆக உயர்ந்துள்ளது என 'தி ஸ்டார்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த எண்ணிக்கை 3,439ஆக இருந்தது. திங்கட்கிழமை காலை 8.00 மணி வரையிலான நிலவரப்படி 1,081 குடும்பங்கள் 29 துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கெடாவில் வெள்ளம்: 3,650 பேர் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம்
1 mins read