பட்டர்வொர்த் (பினாங்கு): ஆயுதமேந்திய கொள்ளையர்களால் இரண்டு மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. காலை 9.30 மணியளவில் சிராம் சாலையில் அமைந்துள்ள தங்க வியாபார அங்காடிக்கு முன்புறம் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தங்கம் கொண்டுவரப்பட்ட லாரியை ஒரு சிவப்பு நிறக் கார் வழிமறித்தது. அதில் மூன்று கொள்ளையர்கள் இருந்தனர் என்றும் இருவர் கோடரியுடனும் கத்தியுடனும் இருந்தனர் என்றும் சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்தனர். அந்தக் கொள்ளையர்கள் இரு பைகளில் பத்து கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவ இடத்தைக் கடந்து சென்ற உரிமம் பெற்ற பாதுகாவலர் ஒருவர் அக்கொள்ளையர்களை கைத்துப்பாக்கியால் சில முறை சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர். விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்தை போலிசார் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
விநியோக லாரியிலிருந்து 10 கிலோ தங்கம் கொள்ளை
1 mins read

