ஜெர்மன் பிரதமர் மெர்க்கலுக்கு சிக்கல்

ஜெர்மன் பிரதமர் மெர்க்கலுக்கு சிக்கல்

1 mins read
faae899e-c6ae-4fed-a134-e0d3c38dfa6f
-

பெர்லின்: ஜெர்மனியில் நடந்த தேர்தலில் 4-வது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆட்சி அமைப்பதில் சிக்கலை எதிர் நோக்குகிறார். பிரதமர் பதவியை மெர்க்கல் தக்கவைத்துக் கொண்டுள்ள போதிலும் அவரது கூட்டணி இத் தேர்தலில் மோசமான முடிவுகளைச் சந்தித்த தைத் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் திருவாட்டி மெர்க்கலின் கன்சர்வேடிவ் சிடியூ/சிஎஸ்யூ கூட்டணி தேர்தலில் மிக மோசமான முடிவுகளை சந்தித்துள்ள போதிலும் நாடாளு மன்றத்தில் இக்கூட்டணி பெரும்பான்மை வகிக்கும். அதன் தற்போதைய கூட்டணிக் கட்சியான எஸ்பிடி கடுமையான தோல்விகளைச் சந்தித் துள்ளதைத் தொடர்ந்து முக்கிய எதிர்க்கட்சியாக செ ய ல் ப ட வி ரு ப் ப தா க அறிவித்துள்ளது.

தேர்தலில் 13% வாக்குகளைப் பெற்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக நுழையவுள்ள ஏஎஃப்டி எனும் வலதுசாரி கட்சியின் முன்னணி வேட்பாளர்களான அலிஸ் வெய்டலும் (வலது), அலெக்சாண்டர் காவ்லாண்டும் சந்தித்துக்கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்