தோக்கியோ: ஜப்பானில் திடீர் தேர்தல் நடத்துவதற்கு ஆயத்தமாக நாடாளுமன்ற கீழ் அவை வரும் வியாழக்கிழமை கலைக்கப்படும் என்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு அபே, ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் தங்கள் முயற்சிகளை வடகொரியா தடுக்க முடியாது என்று கூறினார். வடகொரியா அதன் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடத் தவறினால் அந்நாட்டுக்கு கூடுதல் நெருக்கு குதல் கொடுக்கவிருப்பதாகவும் திரு அபே உறுதி கூறினார். தீடீர் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை திரு அபே அறிவிக்கவில்லை. ஆனால் வரும் அக்டோபர் 22ஆம் தேதி திடீர் தேர்தல் நடத்தப்படும் என்று ஆரம்பத் தகவல்கள் கூறுகின்றன. திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்த திரு அபே முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானிய நாடாளுமன்றம் செப்டம்பர் 28ல் கலைப்பு
1 mins read
-

