டென்பசார்: இந்தோனீசியாவின் பாலியில் உள்ள அகுங் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம் இருப்பதால் அங்கிருந்து 57,000க்கும் மேற்பட்டோர் வெளி யேறியுள்ளனர். அந்த எரிமலை அதிர்வுகளை ஏற்படுத்துவதாகவும் அதிலிருக்கும் எரிமலைக் குழம்பு உயர்ந்து வருவதாகவும் பாதுகாப்பு கருதி பலர் அவ்விடத்திலிருந்து வெளியேறி உள்ளனர். 1963ஆம் ஆண்டில் அகுங் எரிமலை வெடித்ததில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த எரிமலை குமுறத் தொடங் கியுள்ளது. "எரிமலை வெடிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. ஆனால் எப்போது வெடிக்கும் என்பதை முன்னுரைக்க முடியாது. ஏரிமலை யால் ஏற்பட்டுள்ள அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எரிமலையில் உள்ள எரிமலைக் குழம்பு உயர்ந்து வருவதை இது காட்டுகிறது," என்று இந்தோனீசி யாவின் எரிமலை, நிலவியல் பேரிடர் நிவாரண மையம் தெரி வித்துள்ளது.
பாலியில் எரிமலையால் அதிர்வுகள்: 57,000க்கும் மேற்பட்ட மக்கள் தப்பி ஓட்டம்
1 mins read

