யங்கூன்: மனிதாபிமானத்துக்கு எதிராக மியன்மார் குற்றம் புரிந்து வருவதாக மனித உரிமைக் கண் காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தி உள்ளது. மியன்மார் ராணுவம் ரோ ஹிங்யா மக்களுக்குக் கொடுமை இழைத்து வருவதாகக் கூறிய அந்த அமைப்பு, அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராணுவத்தின் சீற்றத்திலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். வசிப்பதற்கு இடமில்லாமலும் பசிக்கு உணவு இல்லாமலும் பலர் தவித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளன.
இந்நிலையில், இந்தக் குற்றச் சாட்டை மியன்மார் மறுத்துள்ளது. ரோஹிங்யா மக்களுக்கு எதிராக தமது ராணுவம் வன்முறையைக் கையாள்கிறது என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லை என்று அது கூறியது. பொதுமக்களின் உரிமையைப் பாதுகாப்பதில் தனக்குக் கடப்பாடு இருப்பதாகவும் மியன்மார் தெரி வித்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது ராணுவம் போரிட்டு வருவதாகக் கூறிய மியன்மார், இந்தப் பயங்கரவாதிகள்தான் மியன்மாரின் போலிசார், ராணுவ அதிகாரிகள், குடிமக்கள் ஆகி யோரைக் கொன்று வருவதாகக் குற்றம் சாட்டியது.
பங்ளாதேஷில் உணவுக்காகப் பசியுடன் காத்திருக்கும் ரோஹிங்யா சிறார். படம்: ராய்ட்டர்ஸ்

