டெல் அவிவ்: வெஸ்ட் பாங்க்கில் உள்ள யூதர் குடியிருப்பின் நுழைவாயிலில் பாலஸ்தீனத் துப்பாக்கிக்காரன் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலியர்கள் மூவர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுழைவாயிலில் இருந்த இஸ்ரேலிய போலிஸ் அதிகாரிகளைக் குறிவைத்து அவர் சுட்டதாக அறியப்படுகிறது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் படுகாயமுற்றனர். இந்நிலையில், துப்பாக்கிக்காரனின் சகோதரனை இஸ்ரேலிய ராணுவம் கைது செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலியர்கள் மூவரைக் கொன்ற பாலஸ்தீனிய துப்பாக்கிக்காரன்
1 mins read

