பெய்ஜிங்: பயங்கரவாத நடவடிக் கைகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 29 சீன நாட்டவர்களை மலேசியா வெளி யேற்றியுள்ளது. சீனாவில் இதனை நேற்று அறிவித்த மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி, பயங்கரவாதத்திற்கு எதி ரான காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்தனர் என்றார். ஆனால் எப்போது அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிட வில்லை. உள்துறை அமைச்சருமான ஸாஹித், இவர்களை அடையாளம் காண 'பயோமெட்ரிக்' தகவல் களை வழங்கிய சீனாவின் அதி காரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மற்றொரு விவகாரம் குறித்து பேசிய ஸாஹிட், 'மக்காவ் மோசடி'யில் தொடர்புடைய 416 சீனர்களை மலேசியா வெளியேற்றி யுள்ளது என்றும் சொன்னார்.
சீனாவில் மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி. படம்: மலேசிய ஊடகம்

